சென்னையில் ஒரே நாள் இரவு 5,968 வழக்குகள் பதிவு.

by Editor / 18-01-2022 02:51:13pm
சென்னையில் ஒரே நாள் இரவு  5,968 வழக்குகள் பதிவு.

தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  தமிழக அரசு கடந்த ஜனவரி 6 ஆம் தேதி  முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை  இரவு நேர முழு ஊரடங்கும், சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரையிலும் 32மணிநேர முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துஅதனை முழுமையாக மக்கள் கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. காவல்துறையும் முழுமையாக பொதுமக்களுக்கு அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வலியுறுத்தி வருகிறது.சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10 ஆயிரம் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 95 வழக்குகள், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 175 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வாகனம் என மொத்தம் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,666 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,33,200 அபராதமும், தனிமனித இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,000 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது, மேலும், போக்குவரத்து காவல் குழுவினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 5968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Tags : vahicle cheek up

Share via