பீகாரில் கள்ளச்சாராயம் பறிபோன 5 உயிர்கள்

by Admin / 27-01-2022 04:30:51pm
பீகாரில் கள்ளச்சாராயம்  பறிபோன 5 உயிர்கள்

மதுவிலக்கு தடைச்சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 

கள்ளச்சாராய கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். எனினும், கிராமப்புறங்களில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் புழக்கம் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில், புக்சர் மாவட்டம் அன்சார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலி மதுபானத்தை வாங்கி குடித்துள்ளனர். அவர்களில் 8 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். 
 
ஹோமியோபதி மருந்து பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட டாரு என்ற மதுபானத்தை குடித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 
 

 

Tags :

Share via