கோவை தெற்கு தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை கோரி   நீதிமன்றத்தில் வழக்கு

by Editor / 14-05-2021 03:57:35pm
கோவை தெற்கு தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை கோரி   நீதிமன்றத்தில் வழக்கு


கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .
நடந்த முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் இழுபறிக்குப் பின்னர் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி வாகை சூடினார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் களமிறங்கினர்.
கடந்த 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது பிற்பகல் வரையில் கமல்ஹாசன் அந்த தொகுதியில் முன்னிலை வகித்தார். பின்னர், முன்னிலை நிலவரம் தலைகீழாக மாறியது. கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்தார் வானதி சீனிவாசன். கோவை தெற்கு தொகுதியில் வெற்றி வாகையை சூடப்போவது யார்? என்ற பதற்றம் இரவு 9 மணிக்கு மேலும் நீடித்தது. இறுதியில், வானதி சீனிவாசன் 1,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசனே தோற்று போனது கட்சியினரை அதிருப்தி அடையச் செய்தது. 
இதையடுத்து, கடந்த 11ம் தேதி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

Tags :

Share via