சொத்து வரியை அதிரடியாக உயர்த்திய த அரசு

by Editor / 02-04-2022 02:53:53pm
சொத்து வரியை அதிரடியாக உயர்த்திய த அரசு

சொத்து வரி எவ்வளவு? 


600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, 25 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

601 முதல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1201 முதல்‌ 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம்‌ மட்டும்‌ சொத்து வரி உயர்த்தப்படுகிறது.

1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம்‌ சொத்துவரி உயர்வு செய்யப்படவுள்ளது.


தற்போது உள்ள சொத்து வரியில்‌, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும்‌, தொழிற்சாலை மற்றும்‌ கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும்‌ உயர்த்தப்படுகிறது. அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும்‌ இதர 20 மாநகராட்சிகளில்‌, சொத்து மதிப்பு உயர்வு 2022-23ம்‌ நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.
இதற்கு முந்தைய சொத்து வரி சீராய்வுகளின்‌ போது, குடியிருப்புகளின்‌ பரப்பளவிற்கு ஏற்றவாறு தனித்தனியாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள்‌ எடுக்கப்படவில்லை. ஆனால்‌ தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்படாத வகையில்‌குடியிருப்புகளின்‌ பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

 

Tags : சொத்து வரி

Share via