கொரோனா தொடர்வதால்  பாலிசி என்ன ஆகும் ?

by Editor / 19-05-2021 07:27:39pm
கொரோனா தொடர்வதால்  பாலிசி என்ன ஆகும் ?

 

ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இழப்பீடு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு க்ளைம் கொடுப்பது என்பதற்கு பொதுவான விதிகள் இருக்கும். அதனை அடிப்படையாக வைத்தே ப்ரீமியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சமயங்களில் பெரு மழை, இயற்கை பேரிடர்கள் நடந்தால் கூட நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில்தான் நடக்கும் என்பதால், ப்ரீமியத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால், தற்போது சர்வதேச அளவில் மருத்துவ நெருக்கடி இருப்பதால் மருத்துவச் செலவு மற்றும் மரணம் அடைந்தால் பாலிசி தொகையை கொடுக்க வேண்டி இருப்பதால் காப்பீடு நிறுவனங்கள் அதிக தொகையை நிர்ணயம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் வரை சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு க்ளைம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தத் தொகை மேலும் உயரக்கூடும் என காப்பீடு நிறுவனங்கள் கணிக்கின்றன. இழப்பீடு கொடுப்பது மட்டுமல்லாமல், அடுத்துவரும் பல மாதங்கள் நிச்சயமற்ற சூழலில் இருப்பதால் அதற்கும் சேர்ந்த ப்ரீமியத்தை நிர்ணயம் செய்ய காப்பீடு நிறுவனங்கள் திட்டமிடுவதாக தெரிகிறது.இந்த நிலையில், கொரோனா பாலிசியை புதுப்பிக்க முடியவில்லை அல்லது புதிய கொரோனா பாலிசியை எடுக்க முடியவில்லை என்பது உள்ளிட்ட புகார்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு வருகின்றன.இதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் காத்திருப்பு காலத்தை நாங்கள் அதிகரித்திருக்கிறோம் என கூறுகின்றன

 

Tags :

Share via