கச்சா எண்ணை கொள்முதல் செய்வது அமெரிக்காவின் தடையை மீறிய செயல் அல்ல வெள்ளை மாளிகை

by Staff / 13-04-2022 02:28:21pm
கச்சா எண்ணை கொள்முதல் செய்வது அமெரிக்காவின் தடையை மீறிய செயல் அல்ல வெள்ளை மாளிகை


ரஷ்யாவிடம் இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது அமெரிக்காவின் தடையை மீறிய செயல் அல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் ஜென் சாகி இந்தியாவின் கொள்முதல் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் தான் என்று தெரிவித்தார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் இதனை குறிப்பிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் நிறுத்தும்படி கோரிய ஜோ பைடன் மோடியிடம் இதற்கான உறுதி மொழியை கேட்டாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்து. ஒவ்வொரு நாடும் தங்கள் நிலைப்பாட்டை எடுக்க லாம் இதுகுறித்து பிரதமர் மோடியும் இந்திய மக்களே முடிவு செய்யட்டும் என்று கூறினார் அமெரிக்காவிடம் இருந்து அதிக அளவில் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via