ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  திமுக துணை நிற்காது கனிமொழி எம்.பி. பேட்டி

by Editor / 21-05-2021 08:49:15pm
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  திமுக துணை நிற்காது கனிமொழி எம்.பி. பேட்டி

 


ஸ்டெர்லை ட் ஆலையை மீண்டும் திறக்க திமுக ஒருபோதும் துணை நிற்காது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர் அளித்த பேட்டி வருமாறு:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை கடந்த 14 ஆம் தேதி முதலமைச்சரிடம் வழங்கினார். அதனை ஒருவாரத்திற்குள் மிக விரைவாக பரிசீலித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரில் வாரிசு இல்லாத ஒருவர் தவிர மற்ற 12 பேரின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கியுள்ளார். மேலும் போராட்டத்தின் போது அதிகமாக பாதிக்கப்பட்ட 5 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் கல்வித் தகுதியின் அடிப்படையில் அல்லாமல், அனைவருக்கும் கிராம உதவியாளர் பணியிடம் வழங்கப்பட்டு இருந்தது. இதனை அவர்கள் ஏற்றுக கொள்ளவில்லை. எனவே கல்வித் தகுதியின் அடிப்படையில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு தூத்துக்கு-டி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
போராட்ட வழக்குகளால் படிப்பை தொடர முடியாமலும், வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெற முடியாமலும் இருந்த பலருக்கு தற்போது தடையில்லா சான்று வழங்க உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்று காலமாக இருப்பதால் தொடர்ந்து விசாரணையை நடத்த முடியவில்லை என்றும், கொரோன நோய்த் தொற்றின் பரவல் குறைந்தபின்பு முறையாக விசாரித்து இறுதி அறிக்கையை அளிப்பதாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எந்த சூழ்நிலையிலும் தி.மு.க. துணையாக இருக்காது என்றார்.
பேட்டியின் போது தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via