எந்த வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

by Editor / 22-05-2021 03:44:40pm
எந்த வித தளர்வுகளும் இன்றி  ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

 

 

தமிழகத்தில் மே 24-ஆம் தேதி முதல் எந்த வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

*முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி

*பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி

*பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கும் தமிழக அரசு அனுமதி

*நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி

*வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் தனியார், அரசு பேருந்துகள் செல்ல அனுமதி

*பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரிலும் , அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

*தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும்

*தனியார் நிறுவனங்கள் வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணி புரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்

*மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்

*உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி

*ஸ்விகி, சொமேட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படும்.*ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகளுக்கு அனுமதி

*வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி

*சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி

*உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபதிவு உடன் அனுமதி

*மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபதிவு தேவையில்லை

*செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்

*தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொழில் தொழில் செயல்முறை தொழிற்சாலைகள் அத்தியாவசிய பொருட்கள் மருந்து உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அனுமதி

 

Tags :

Share via