தந்தை கொலை வழக்கில் அதிமுக முன்னாள் பேரூராட்சி தலைவி கைது

by Editor / 13-05-2022 05:03:26pm
தந்தை  கொலை  வழக்கில்  அதிமுக முன்னாள்  பேரூராட்சி தலைவி கைது

தென்காசி அருகில் உள்ள இலஞ்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டை மாடல் சொந்தமாக 1.82 ஏக்கர் பரப்பளவில் தோப்பு உள்ளது இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மைதீன் பத்து  இரண்டாவது மகள் சந்திரா,மூன்றாவது மகள் ஸ்ரீதேவி, கோட்டை மாடன் இரண்டாவது மகள் சந்திராவுடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் கோட்டைமாடன் தனக்கு சொந்தமான 1.82 ஏக்கர் தோட்டத்தை  மூன்றில் இரண்டு பாகத்தை தனது 2வது மகள் சந்திராவின் மகன் விஜயகுமார் பெயரில் எழுதி வைத்துள்ளார்.மேலும் ஒரு பாகத்தை  தனது கைவசம் வைத்துள்ளார்.இந்த நிலையில் இந்த சொத்து குறித்து ஏற்கனவே குடும்பத்திற்கும் மோதல் இருந்துவந்த நிலையில் 2 பாகத்தை பேரன்  பெயருக்கு எழுதிவைத்ததற்கு மூன்றாவது மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மேலும் இதுகுறித்து கோட்டை மாடனுக்கு  வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் எனினும் குடும்பத்திற்குள் சொத்து விஷயமாக உடன்பாடு ஏற்படவில்லை இந்த நிலையில் பல்வேறுகோட்டை மாடனிம் மூத்த மருமகன் பரமசிவம் மூன்றாவது மகள் ஸ்ரீதேவி ஆகியோர் சொத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், இதில் தீர்வு எட்டப்படாததால்  தொடர்ந்து தந்தையை கொலை செய்வதற்காக ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவம் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர், அதன்படி பரமசிவன் வீட்டில் வேலை செய்து வரும் ஆட்டோ டிரைவரான சேகர் என்பவரை தொடர்பு கொண்டு கூலிப்படையை வைத்து கொலை செய்வதற்கான திட்டம் தீட்டியுள்ளனர் இதன் தொடர்ச்சியாக கல்லிடைக்குறிச்சி சேர்ந்த வசந்தகுமார் மற்றும் மகேஷ் ஆகியோரிடம் ஒரு லட்ச ரூபாய் கூலியாக பேசி முன்பணமாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர் வசந்தகுமார் மகேஷ் இருவரும் கூலிப்படையாக செயல்பட்டு பல்வேறு முறை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் கோட்டை மறந்து தோப்பில் உள்ள மரத்தை விலை பேசி வாங்குவது போன்று நடித்து வசந்தகுமார், மகேஸ்  சேகர் ஆகிய 3 பேரும் கோட்டை மாடனை அவரது தோட்டத்திற்கு வரவழைத்து அங்கே  கடந்த 4-ஆம் தேதியன்று அடித்துத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இது குறித்து குற்றாலம் போலீசார் தீவீர  அடிப்படையிழும்,கண்காணிப்பு கேமராக்காட்சிகள் மூலமும் குற்றவாளிகளை கண்டறிந்து  வசந்தகுமார், மகேஸ் ஆகியோரை கைது செய்த்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் இந்தக்கொலையில் கோட்டைமாடனின் மகள் ,மருமகன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.அவர்களும் கைது செய்யப்பட்டனர்,மேலும் இந்தக்கொலையில் தொடர்புடைய சேகர்என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் இந்த  கொலையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட பரமசிவத்தின் மனைவியும்,கோட்டை மாடனின்  மூத்த மகளும் அதிமுக முன்னாள் இலஞ்சி பேரூராட்சியின் தலைவியுமான மைதீன் பாத்து என்பவரும்  கைது செயப்பட்டார்.

 

Tags : Former AIADMK mayor arrested in father murder case

Share via