பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது;  நடவடிக்கை எடுக்க ஒய்.ஜி.மகேந்திரன் வேண்டுகோள் 

by Editor / 24-05-2021 05:41:31pm
பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது;  நடவடிக்கை எடுக்க ஒய்.ஜி.மகேந்திரன் வேண்டுகோள் 

 

தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது; நடவடிக்கை எடுங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் டிவிட் முலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது 

 'சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தரப்பிலிருந்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் என்னுடைய கவனத்திற்கு வந்தவுடன் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன். அதில் மாணவர்கள் பாதிக்காத வகையில், உரிய முறையில் விசாரணை நடத்தி, ஆசிரியர் மீது தவறு இருந்தால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

தன் தாயார் உருவாக்கிய பள்ளிக்கு எவ்விதமான அவப்பெயரும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன். மேலும், பள்ளியை நிர்வகிப்பதில் தனக்கோ; தன் மகளுக்கோ எவ்விதமான பங்கும் இல்லை' என்று தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், சென்னை கே.கே. நகர் பிஎஸ்பிபி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், பெற்றோர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது மாதிரியான புகார்கள் கடந்த காலங்களில் தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

Dailyhunt

 

Tags :

Share via