(மே.26) முழு சந்திர கிரகணம் வடகிழக்கு மாநிலங்களில்  தெரியும் 

by Editor / 24-07-2021 05:29:47pm
 (மே.26) முழு சந்திர கிரகணம் வடகிழக்கு மாநிலங்களில்  தெரியும் 

 

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம்  (மே.26) நிகழ்கிறது. இதனை இந்தியாவிலும் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது.


இந்தாண்டின் முதல் முழு சந்திர கிரகணம்  (மே.26) நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா, பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தெரியும்.
வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் தவிர்த்து), மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், ஒடிசா மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் இதனைக் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் தெரியும் நேரம்: மாலை 3.15 மணிக்குத் தொடங்கி மாலை 6.23 மணிக்குக் கிரகணம் நிறைவு பெறுகிறது.அடுத்த சந்திர கிரகணத்தை 2021, நவம்பர் 19 அன்று காணலாம். அது, பகுதி சந்திர கிரகணமாக நிகழும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via