கோயில் குளத்தில் செம்பு காசு போட்டதன் காரணமென்ன..?

by Editor / 26-06-2022 01:46:52pm
கோயில் குளத்தில் செம்பு காசு போட்டதன் காரணமென்ன..?

 பழமையான கோயில்களில் கோயில் குளம் அல்லது கிணற்றில் காசு போடப்பட்டிருப்பதையும்,  நம் கண் முன்னே பலரும் காசு போடுவதையும் நாம் கண்டிருப்போம்.இது போன்று கோயில் கிணற்றில் காசு  போடப் பட்டதின் காரணத்தைப் பற்றி பார்ப்போம். 

பழமையான காலங்களில் புழக்கத்தில் இருந்த காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. மண், நீர், காற்று ஆகியவற்றில் இயற்கையாகவே செம்பு உலோகம் உருவாகிறது. இவ்வளவு ஏன், நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு சில உலோகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தும் பழக்கம் அந்த காலத்தில் இருந்தது.

பழங்காலத்தில் குளம், குட்டைகளில் இருந்தும், கிணறுகளிலிருந்தும் தான் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். 
அப்படி எடுத்து வரும் தண்ணீரை அருந்துவதற்கு செம்பு கலந்த பின் நீரை அருந்துவது உடலுக்கு வலிமையும், குளிர்ச்சியும் தந்து நலம் உண்டாக்கும். இதனால், செப்பு காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. 

ஆனால், இன்றைய காலகட்ட த்தில், ஆறு, கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பழக்கம் காணாமலேயே போய்விட்டது. அதோடு,  செப்பு காசு முறை அழிந்துவிட்டது. ஆனால், பழமையான கோயில்களில் இருக்கும் கிணற்றில் காசு போடும் பழக்கம் மட்டும் இன்னும் நம்மில் இருந்து கொண்டே இருக்கிறது. உண்மையில், செம்பு காசுகளைத் தான் கிணறு, குளத்தில் போட வேண்டும். அவைகள் தான் நமக்கு நன்மையளிக்கும்.

 

Tags :

Share via