பக்ரீத் பண்டிகை.. கிருஷ்ணகிரியில் ஒரேநாளில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

by Editor / 03-07-2022 05:45:58pm
 பக்ரீத் பண்டிகை.. கிருஷ்ணகிரியில் ஒரேநாளில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

போச்சம்பள்ளி ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையின் ஒரு பகுதியில் ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் வரும் 10-ம் தேதி பக்ரீத் என்பதால் தற்போதே ஆடு விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

இதற்காக ஆந்திராவில் இருந்து செம்மறி வகை ஆடுகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டிருந்தன.
 
ஆடுகள் 6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி  ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், தருமபுரி, மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று மட்டும் 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via