அண்ணா பல்கலைக்கழகம், 476 கல்லூரிகளில் ஆய்வு நடத்தியது

by Admin / 06-07-2022 03:07:40pm
அண்ணா பல்கலைக்கழகம்,  476 கல்லூரிகளில் ஆய்வு  நடத்தியது

எம்பிஏ மற்றும் எம்சிஏ கட்டிடக்கலை படிப்புகளை வழங்கும் 225 பொறியியல் கல்லூரிகள்  தகுதியான ஆசிரியர்கள், ஆய்வகங்கள் , உபகரணங்கள் போன்ற  உள்கட்டமைப்புகள்  இல்லை என  அண்ணா பல்கலைக்கழகம் தொிவித்துள்ளது. , இரண்டு வாரங்களுக்குள் முரண்பாடுகளை சரிசெய்து இணைப்பு நீட்டிப்பைப்  பெறுமாறு  கல்லூரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், ஜூன் மாதங்களில்  476 கல்லூரிகளில் ஆய்வு  நடத்தியது. இந்த  கல்லூரிகள் 2022-23  கல்வியாண்டுக்கான  இணைப்பு  நீட்டிப்பு  கோரியுள்ளன. 225  கல்லூரிகளில்  குறைந்தபட்சம் ஒரு திட்டத்தில்  50  விழுக்காட்டிற்கும்  அதிகமான  குறைபாடுகள்  இருப்பதாக குழு   கண்டறிந்துள்ளது.. அனுமதிக்கப்பட்ட  எண்ணிக்கையை விட குறைவான ஆசிரியர்களே  இருந்தனர், சிலவற்றில் ஆய்வக வசதிகள் இல்லை  62க்கும்  மேற்பட்ட கல்லூரிகளில் 25  விழுக்காடு  முதல்  50  விழுக்காடு  வரைஉள்கட்டமைப்பு  குறைபாடுகள் இருப்பதும், 23 முதல்வர்கள்  விதிமுறைகளின்படி தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டது. தகுதியற்ற நபர்களை முதல்வராக உள்ள கல்லூரிகளுக்கு விதிமுறைகளின்படி புதிய முதல்வர்களை நியமிக்க வேண்டும். 50%க்கும் குறைவான முரண்பாடுகள் உள்ள கல்லூரிகளும் இணக்கஅறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்  உள்கட்டமைப்பு  மற்றும்   பணியாளர்களில்  25  விழுக்காட்டிற்கும் குறைவான இடைவெளியுடன் கண்டறியப்பட்ட 166 கல்லூரிகள் இணைப்பு நீட்டிக்கப்படும்என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

 

Tags :

Share via