ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் சர்க்கரை நோய், இதய நோயை, தடுக்கும் ஆய்வில் தகவல்.

by Editor / 07-07-2022 09:49:23am
ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால்  சர்க்கரை நோய், இதய நோயை, தடுக்கும் ஆய்வில் தகவல்.

வடக்கு போர்ச்சுக்கலில் உள்ள போட்டோ நகரில் சுகாதார தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளுக்கான ஆராய்ச்சி மையம் உள்ளது, இந்த மையம் 23 வயதிலிருந்து 58,வயதிற்குட்பட்டவர்கள் சிலரை ஆய்வுக்கு உட்படுத்தியது,

தொடர்ந்து 4 வாரங்கள் அவர்களை ஆல்ஹால் இல்லாத 330 மில்லிகிராம் பீரை குடிக்க வைத்தனர்.இதில் அவர்களில் நூண்ணியிரிகளின் செயல்பாடு மேம்பட்டது தெரியவந்தது.

இந்த நுண்ணுயிர்களின் நீரிழிவு,இதய நோய், போன்ற நாள்பட்ட நோய்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் ஆல்கஹால் இல்லாத பீர் குடித்தால் இதுபோன்ற செயல்பாடுகளில் நிகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆல்கஹால் இல்லாத பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல்  குடல் நுண்ணுயிர்களின் பன்முகத் தன்மைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிவப்பு ஒயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுவை போல பீரிலும் நன்மைகள் பயக்கும் பாலிபினாக்கள் உள்ளதாக ஆய்வு நடத்தியவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் ஆல்கஹால் கலந்த பீரை சாப்பிடுவதால் எந்த நன்மையும் கிடைக்காது என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via