திமுக எம்.பி.க்கள் 5 பேர் உள்பட 11 எம்.பி.க்கள் பேர் இடைநீக்கம்

by Editor / 26-07-2022 03:25:39pm
திமுக எம்.பி.க்கள் 5 பேர் உள்பட 11 எம்.பி.க்கள் பேர் இடைநீக்கம்

திமுக எம்.பி.க்கள் கிரிராஜன், கனிமொழி சோமு, அப்துல்லா, சண்முகம், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

முன்னதாக, விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதி மணி, மாணிக்கம் தாக்கூர் உள்பட 4 பேர் மக்களவையில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை கூடியது. காலை 11 மணிக்கு அவை கூடியதும் அலுவல் தொடங்கியது. அப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு, விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், சாந்தனு சென், டோலா சென் ஆகியோரும் ஒரு வாரத்திற்கு மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன.

 

Tags : 11 people including 5 DMK MPs suspended from Rajya Sabha

Share via