பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது.

by Editor / 01-08-2022 10:29:08am
பொறியியல் படிப்பு  மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று  தொடங்குகிறது.

பொறியியல் படிப்புக்களில் சேர பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள சிறப்பு மையங்கள் வாயிலாகவும் மாணவர்கள் கடந்த 27ந்தேதி வரை விண்ணப்பித்தனர். மொத்தம் 2,11,115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர  https://tneaonline.org/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை மாதம் 19ம் தேதி வரை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சிபிஎஸ்சி மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம் கடந்த 27ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உயர்க்கல்வித்துறை தெரிவித்தது.

இதையடுத்து இன்று முதல் பொறியியல் படிப்பில் சேர்வோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள 2,11,905 பேருக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு இன்று தொடங்குகிறது.


இன்று முதல் வரும் 7ம் தேதி வரை விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 2,442 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 18ம்தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ள உயர் கல்வித்துறை, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.


 

 

Tags :

Share via