நடராஜர் கோயிலில் மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

by Staff / 04-10-2022 05:27:37pm
  நடராஜர் கோயிலில் மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது. 1956ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நகைகள் சரி பார்க்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இது குறித்து சிதம்பர நடராஜர் கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர், பட்டு தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சிதம்பரம் நடராஜர் கோயிலின் வழக்கறிஞர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது "கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2005 முதல் 2022 வரை நகைகள் சரிபார்ப்பு பணி ஐந்து நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இச்சோதனை குறித்து எந்தவித சான்றும் கோவில் நிர்வாகத்திடம் அளிக்கப்படவில்லை. அதிகார வரம்புக்கு உட்பட்டு அவர்கள் வரவில்லை. அழையா விருந்தாளியாக அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். வெளிப்படத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒத்துழைப்பு தந்தோம். மேலும் 1956 ஆம் ஆண்டில் இருந்து 2005 வரை உள்ள நகைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என அவர்கள் கூறினர். ஏற்கனவே உள்ள நகைகள் சரிபார்ப்பு முடிந்த பிறகும் மீண்டும் சரி பார்ப்பது என்பது தேவையற்றது இதை நாங்கள் ஏற்கவில்லை மேலும் 2022 வரை உள்ள நகைகளை சீல் வைக்க வேண்டும் என அறநிலையத்துறையினர் கூறியுள்ளனர் கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லை அதனால் அதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை கடந்த 1956 இல் இருந்து 2005 வரை மீண்டும் மறுமதிப்பீடு செய்வதாக கூறியிருப்பது அறநிலையத்துறையின் உள்நோக்கம் மற்றும் காழ்ப்புணர்ச்சியை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் நடராஜர் கோவிலின் நகைகளை தனி ஆடிட்டர் வைத்து ஓய்வு பெற்ற நீதிபதி முன்னணியில் தீட்சிதர்கள் குழுவினரோடு நாங்களே தணிக்கை செய்து மக்களுக்கு தெரியும் வகையில் வெளிப்படையாக அறிவிப்போம். அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 15 லட்சத்திற்கு மேலான தணிக்கை குழு அறிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் விவகாரத்தில் மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது வேதனை அளிக்கிறது. மேலும் நடராஜர் கோயிலில் தீச்சகர்கள் பால்ய விவாகம் செய்தால் தான் கோவில் நிர்வாகம் பூஜை முறைக்கு அனுமதி அளிக்கும் என தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறு. திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் 25 வயதிற்கு மேல் முறையாக வேதம் படித்து ஆகம விதிகளோடு பயிற்சி பெற்று சந்திரமௌலீஸ்வரருக்கு பூஜை செய்த பின் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் தீட்சையர்களை போலீசார் கைது செய்திருப்பது ரவுடிகளை கைது செய்வது போல் உள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்" என பேட்டியளித்தார்.

 

Tags :

Share via