கர்ப்பிணியான காவலர் விபத்தில் பலி.

by Editor / 12-10-2022 10:40:58am
கர்ப்பிணியான காவலர் விபத்தில் பலி.

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே  அம்மாண்டிவிளை கட்டைக்காடை சேர்ந்தவர் சந்திரசேகர் (38). மார்பிள் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி  உஷா (37). இவர் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 7 வயதில் ஒரு மகன் உள்ளான். தற்போது உஷா 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். நேற்றிரவு காவல் நிலைய பணி முடிந்து தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பினார். வெள்மோடி - அம்மாண்டிவிளை சாலையில் கட்டைக்காட்டு சாலையில்  செல்லும்போது சிக்னல் போட்டு வீட்டிற்கு செல்லும் பாதையில் மொபட்டை திருப்பினார். அப்போது எதிரே வேகமாக பைக் ஓட்டி வந்த முட்டம் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்த அபிஷேக் பெக்கட் என்ற சஞ்சய் என்பவர் உஷா பைக் மீது மோதினார். இதில் அவர் உஷா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் உஷா  பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவர் சந்திரசேகர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்து செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாதம் கர்ப்பிணியான  பெண் காவலர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via