ஹோட்டல் நடத்தி உரிமையாளருக்கு  கடன் தராமல் மோசடி செய்த பப்ஜி மதன் 

by Editor / 17-06-2021 05:54:38pm
ஹோட்டல் நடத்தி உரிமையாளருக்கு  கடன் தராமல் மோசடி செய்த பப்ஜி மதன் 


 

பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி யூடியூப்பில் வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவியான கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே கிருத்திகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 10லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தாகவும், 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாவை வாங்கியதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில் பப்ஜி மதன் அம்பத்தூரில் ஆடம்பரமான ஹீரோ என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி,பின்னர் உரிமையாளருக்கு கடன் தராமல் மோசடி செய்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.கடந்த 2018 ஆம் ஆண்டு அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் 1வருடமாக வாடகை எடுத்து ஹோட்டலை மதன் நடத்தி வந்துள்ளார்.
ஹோட்டலை காட்டி மதன் வங்கிகளிடம் 5லட்சத்திற்கும் மேற்பட்ட கடனை வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 2018 ஆம் ஆண்டு ஹோட்டலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாடகை தராமல் உரிமையாளரை ஏமாற்றி தப்பியோடியுள்ளார். இதனால் உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளித்தார். அப்போது தான் தெரிந்தது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் மதன் கிருத்திகாவை அழைத்து கொண்டு தலைமறைவானது தெரியவந்தது. இதன் பிறகு தான் மதன் தனது அடையாளத்தை காட்டாமல் மனைவி கிருத்திகாவுடன் இணைந்து யூடியூப்பை தொடங்கி பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி லட்சங்களை குவித்து பப்ஜி மதனாக மாறியது விசாரணையில் தெரியவந்தது.
இதுமட்டுமின்றி பப்ஜி மதன் வீடியோ பதிவேற்றம் செய்வதற்காக 3 சிம்கார்டுகளை பயன்படுத்தி உள்ளார். மேலும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட விளையாட்டை வி.பி.என் சர்வரை பயன்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.சிறுமிகளிடம் மதன் பணப்பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையும் நடத்தி வருகின்றன

 

Tags :

Share via