பயணிகள் குறைகளை தீர்ப்பதில்  மதுரை ரயில்வே கோட்டம் முதலிடம்

by Editor / 25-06-2021 06:10:44pm
பயணிகள் குறைகளை தீர்ப்பதில்  மதுரை ரயில்வே கோட்டம் முதலிடம்

 

ரயில் பயணிகள் தங்களது குறைகளை தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று ரயில் மதாத் (Rail MADAD - Mobile Application for Desired Assistance During travel - பயணத்தின்போது தேவையான உதவி பெற செல்போன் செயலி ) என்ற செல்போன் செயலி ஆகும். இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக மொபைல் போனில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்த செயலியில் புகார்கள் பதியப்பட்டவுடன் உடனடியாக அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து உரிய பதிலை குறுஞ்செய்தி மூலம் புகார் செய்தவர்க்கு அனுப்பி விடுவார்கள். சமூக வலைதளங்கள் மற்றும் மற்ற வழிகளில் செய்யப்படும் புகார்களும் இந்த செயலி வழியாக தீர்க்கப்பட்டு வருகிறது. இதுபோல பயணிகள் புகார் களை மதுரை கோட்டம் சராசரியாக 31 நிமிடத்தில் தீர்வு கண்டு தெற்கு ரயில்வேயில் பயணிகள் குறைகளை தீர்ப்பதில் முதலிடம் வகிக்கிறது. கோட்ட ரயில்வே மேலாளர் வி. ஆர். லெனின் ஆலோசனையின் பேரில் குறை தீர்ப்பு பிரிவு அதிகாரியான கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகானியின் தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மதுரை கோட்டம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

 

Tags :

Share via