வூஹான் ஆய்வகத்திற்கு நோபல் பரிசு கோரும் சீனா

by Editor / 25-06-2021 08:14:13pm
வூஹான் ஆய்வகத்திற்கு நோபல் பரிசு கோரும் சீனா

 

கொரோனா எனும் வைரஸ் தொற்று உலகையே நிலைகுலைய வைத்து நாடு முழுவதும்  பல கோடி உயிர்களை பறித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த தொற்றின் பரவல் பற்றிய சர்ச்சைக்கு உள்ளான  சீனாவின் வூஹானில் உள்ள  வைராலஜி ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா தொற்று 2019ம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கி இன்று வரை ஓயாமல் தன் கோர முகத்தை காட்டி கொண்டு இருக்கிறது. மேலும் முதல், இரண்டாம் மற்றும் உருமாறிய வைரஸ் என பல்வேறு விதத்தில் மக்களை பாடாய் படுத்தி கொண்டு வருகிறது. இதிலும் மூன்றாம் அலையின்  அச்சம் வேறு  தற்போது தொற்றிக்கொண்டது. மேலும் அது இயற்கையான வைரஸா அல்லது செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸா என்ற சர்ச்சைக்கு இன்னும் முற்றுப் புள்ளி வைக்கவில்லை.
இந்நிலையில் சீனாவில் உள்ள வூஹான் வைராலஜி ஆய்வகத்திற்கு  கொரோனா பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சீனா  முன்வைத்து உள்ளது. இந்த  வூஹான் ஆய்வகம் என்பது கோவிட்-19 பரவுதலுக்கு காரணமாக, அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளும் சந்தேகிக்கும் ஆய்வகம் ஆகும். இந்த சர்ச்சைக்கு உள்ளான  இந்த வைராலஜி ஆய்வகத்திற்கு சீனா நோபல் பரிசு கோரி இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via