40 ஆண்டுகளுக்குப் பிறகு  புதுச்சேரியில் பெண் அமைச்சர்

by Editor / 26-06-2021 05:09:55pm
 40 ஆண்டுகளுக்குப் பிறகு  புதுச்சேரியில் பெண் அமைச்சர்

 


 முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசின் அமைச்சரவை விரிவாக்கம் இன்று (27ஆம் தேதி) மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.அமைச்சரவை விரிவாக்கத்துக்காக புதிய அமைச்சர்கள் பட்டியலை கடந்த 23ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார்.
இந்தப் பட்டியலில் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.புதிய அமைச்சர்களின் பட்டியல் குறித்து ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து  பதவி ஏற்கவுள்ளனர்.
 அமைச்சரவையில், காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திர பிரியங்கா, அத்தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு  அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் ஆவார்.புதுச்சேரியில் கடந்த 1980ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக திமுகவைச் சேர்ந்த ரேணுகா அப்பாதுரை அமைச்சராகப் பதவி வகித்தார். அதனையடுத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் அமைச்சராக சந்திர பிரியங்கா பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via