காவல்துறை கண்டித்து மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்

by Staff / 07-12-2022 04:25:07pm
காவல்துறை கண்டித்து மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட நாட்டு படகு மூலம் சங்கு குளிக்கும் தொழிலில் 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் 7 நாட்டு படகு உரிமையாளர்கள் சங்கு குளிப்பதற்காக வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இதற்கு உள்ளூர் சங்கு குழி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த மூன்று நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து கடலுக்கு செல்லாமல் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் சங்கு குழி தொழிலாளர்களிடையே திரேஸ்புரம் கடற்கரை அருகே சங்கு குழி தொழிலாளர் சங்க செயலாளர் அலாவுதீன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜ் என்பவர் அலாவுதீனிடம் எதற்காக கூட்டம் கூட்டி உள்ளீர்கள் என்று கூறி அவரை தகாத வார்த்தைகளாள் பேசியதுடன் வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.இந்த சம்பவம் சங்கு குழி தொழிலாளர்கள் அனைவருக்கும் தெரிய வர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சங்கு குழி தொழிலாளர் சங்க செயலாளர் அலாவுதீனை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி திரேஸ்புரம் கடற்கரை சாலையில் மாறியலில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் மறியலை தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அலாவுதீன் விடுவிக்கப்பட்டார்தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வெளி மாவட்ட மீனவர்களை வைத்து சங்கு குழி தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் படகு உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை மிரட்டி வருவதாக சங்கு குழி தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வெளி மாவட்ட மீனவர்கள் வைத்து தொழில் செய்தால் தாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via