புகையிலை பணம் ஒரு லட்சம் இருசக்கர வாகனம் கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் : 5 பேர் கைது

by Staff / 16-12-2022 04:54:24pm
புகையிலை  பணம்  ஒரு லட்சம் இருசக்கர வாகனம் கண்டெய்னர் லாரியையும்  பறிமுதல்  : 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தூத்துக்குடி நேசமணிநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் கணேஷ்நகர் பகுதியை சேர்ந்த கணேசன் (56), கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்களான மகேஷ் (28), அருண்குமார் (23), சதீஷ் நாயக் (23) மற்றும் சஷாங்க் நாயக் (20) ஆகிய 5 பேரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக இருசக்கர வாகனம் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 134 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் ஒரு லட்சம், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via