,நம் நாட்டின் சீதோஷணநிலைக்கு தக உணவு

by Admin / 17-12-2022 02:44:43am
,நம் நாட்டின் சீதோஷணநிலைக்கு தக உணவு

பண்டைய பெருமைகளைப்பேசி பேசி பொழுதைக்கழிக்கும் மக்கள் என்று நம்மை சுத்த கர்நாடகமாகப்பேசியவர்கள்....இன்று  . நம் பாரம்பரிய உணவு முறைகளை..உலக மயமாக்கலில் வந்த நன்மைகள்பல இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன.அதில்,நம் நாட்டின் சீதோஷணநிலைக்கு தக உணவு உண்டவர்கள் இன்றுபதப்படுத்தப்பட்ட ,வேறு மாநில,வேறு நாட்டு உணவுகளை விரும்பி சாப்பிட்டு..உடல் பருமனாகி- பெருத்துப்போய்ஹெல்த் .
இன்ஸ்சூரன்ஸ் எடுக்கவேண்டிய கட்டாயம்,உடல் எடையைக்குறைக்கும் பிட்நெனஸ் சென்டர்கள் மூலைக்கு மூலை பணத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள்.அன்று நம் முன்னோர்கள் உடலில் அக்கறை காட்டினார்கள்இயற்கையாக புதன் -சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடினார்கள்.மழைக்காலத்திற்கு தக்க உணவையும் காலத்திற்கிற்கான உணவையும் சமைத்து உண்டார்கள்.ஒட்டல் சாப்பாடு என்பதே அரிதாக இருந்தது.வெளியூர்காரர்கள் தங்கி இருக்கும்  விடுதிகளில்தான் உணவகம் இருந்தது.என்றாவது ஒருநாள் வீட்டில் சமைக்கவில்லை என்றால்
சாப்பிடுவார்கள், காபி குடிப்பார்கள்.ஆனால்,இன்று பிரியாணி,சிக்கன்,அத்தோ,சவர்மா,சிப்ஸ்கள்,பிரஞ் பங்கர் சிப்ஸ் எனஉடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கக்கூடிய,நாக்கில் ருசி ஒட்டிக்கொண்ட உணவு பதார்த்தங்கள்.பணப்புழக்கம்,நகர்மயமாதல்,கல்வி தந்த புதிய வேலை வாய்ப்பு அது சார்ந்த கலாச்சாரம் வெளிப்படுத்திய உணவு பழக்க வழகநம்மை...நம் ஆரோக்கியத்திற்கு எதிராக கிளம்பி உள்ளன.சின்ன வயதிலேயே முடி கொட்டி விடுகிறது.மயிரைபிடுங்கி நடப்படுவதற்கு லட்சக்கணக்கில் பணம். மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகுவலி,நெஞ்சுவலி,வாயு  தொல்லை ,காது, மூக்கு ,பல்,தொண்டை,நெஞ்சு,கண்,மூக்கு,கால் என அனைத்திற்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ..இதெல்லாம் இல்லாமல் ,நம் முன்னோர்கள் இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.அவர்கள் உணவேமருந்து என்று வாழ்ந்தார்கள்.உடல் சார்ந்த சளி,இருமல்,காய்ச்சல்,பல்வலி,பிரசவம்,இதய றோய் என அனைத்துப்பிரச்சனைகளுக்கும் இயற்கையான மருந்து பொருள்களை வைத்தே தீர்வுகண்டார்கள்.வெயில் காலத்தில்உடல் சூட்டை குறைக்கும் உணவுகள்.நீர் ஆகாரம் என்று நீர்த்த தண்ணீர்,நீர்மோர்,கருப்பட்டி-புளி கரைத்து...ஏலக்காய்போட்டு தயார்செய்த பானம்.உடலில் வெப்பத்தைச்சட்டென்று குறைத்து விடும்.வாழைக்காய் பொரியலா?வாயு தொல்லைவரும்.சாம்பாரில் பெருங்காயம் அதிகம் சேர்ப்பர்.இல்லை, பூண்டு குழம்பு வைப்பர்.இரவு வடித்த சோறில் ஊற்றி வைத்த நீர் காலையில் சோற்றுப்பருக்கைகள் நீர்த்த தண்ணீர் ..காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது உடல்
சூட்டை தணித்து விடும்.நாட்டுக்கோழிக்கறியா...நல்ல மிளகு ரசம்...ஜீரண சக்தியை உருவாக்கும் விதமாக-பக்குவமாகச்சமைத்து பரிமாறுவர்.

,நம் நாட்டின் சீதோஷணநிலைக்கு தக உணவு

 

Tags :

Share via