யோசித்து முடிவெடுங்கள்

by Admin / 21-12-2022 01:05:40pm
  யோசித்து முடிவெடுங்கள்


யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதனையும் செய்யாதீர்கள்.அப்படி செய்வீர்களானால் வீண் பிரச்சனைகளும் பொருட் இழப்பும் நிம்மதியின்மையும்தான் பரிசாகக்கிடைக்கும் .இது எதிர்மறையான சிந்தனையின் வெளிப்பாடு என்றுநினைத்து விட வேண்டாம் .நேர்மறையான சிந்தனை தரும் வழிகாட்டலே. ..உங்களுக்கான  தொழிலை  நீங்கள்தான்யோசித்து  முடிவெடுக்க  வேண்டும் .யாரிடம் வேண்டுமானாலும்  ஆலோசனை கேட்கலாம் .ஆனால், ஆலோசனை சொன்னவர் .உங்கள் லாப நஷ்டத்தில் பங்கேற்க மாட்டார்என்பதை புரிந்து கொள்ளுங்கள் .ஒன்றை தொடங்க வேண்டுமென்றால் ,அது பற்றிய முழுமையான  அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.இல்லையெனில்அது சார்ந்த அறிவுசார் நிபுணர்களுடன் கலந்து பேசி ...விபரம்  தெரிந்து கொள்ள வேண்டும்.புத்தகம்,  இணைய வழிதகவல் களைத் திரட்டி ...தம் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் .வெறும் ஆர்வத்தாலோ  , உணர்ச்சி  மேலீட்டாலோ..கையில் பணமிருக்கிறது,உழைக்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்காகவோ   எதனையும்  ஆரம்பிக்க  முயலாதீர்கள் .உங்களுக்கு என்ன தெரியும்.எவை எல்லாம் தெரியாது என்று யோசியுங்கள்  .தெரிந்தவைகளை  மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.தெரியாததை தெரிந்த மனிதர்களிடமிருந்து பெறுங்கள். புத்தகங்களிலிருந்து எடுங்கள்.
ஒரே நாளில் கோடி  கோடியாக சம்பாதித்தவர்  எவருமிலர் .ஒரே இரவில் -தொடங்கிய அன்றே நிறுவனத்தை உலக அளவில் உயர்த்தியவரும்  ஒருவருமிலர்.
தெளிவான  திட்டமிடுதல் மூலமே எந்தவொரு காரியத்தையும் வெற்றிகரமாக நகர்த்தமுடியும்.  யோசியுங்கள்.
என்ன  செய்யப்போகிறீர்கள்.
எப்படியான வழிமுறைகளைப்பின்பற்றப்போகிறீரகள். என்பதை..யோசியுங்கள்.உங்கள் கனவு-எதிர்காலம் குறித்த
 தேடல்கள் ..உங்களிடமிருந்து புறப்பட்டாலொழிய..அது வெற்றியின் இலக்கினை அடையாது.

 

Tags :

Share via