1ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

by Staff / 23-12-2022 04:59:02pm
1ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

தூத்துக்குடி-தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. நேற்று இரவு கடலுக்கு சென்று திரும்பிய தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் பிடித்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சிவங்க கடலில் தென்மேற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.இதன் காரணமாக வங்க கடல் மன்னார்குளைடா உள்ளிட்ட பகுதிகளில் கடலில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் எனவே ஆழ் கடலில் சென்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 250 க்கும் மேற்பட் விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதே போன்று திரேஸ்புரம், தருவைகுளம், வேம்பார், வீரபாண்டியன் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகு மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.இந்நிலையில் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பிய விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது சுமார் ஒரு கூடை 1500 ரூபாய் வரை போகக் கூடிய முண்டக்கண்ணி பாறை 2500 முதல் 3000 வரையும் விளைமீன் , உளி , நகரை , உள்ளிட்ட மீன்கள் கிலோ 600 முதல் 700 ரூபாய் வரையும்சீலா மீன் கிலோ 1200 வரை விற்பனையானது இதன் காரணமாக விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நாளை மறுநாள் கிறிஸ்து பிறப்பு பண்டிகை இருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ‌மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கடலுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via