சிறைச்சாலை மீது துப்பாக்கிசூடு: 24 கைதிகள் தப்பியோட்டம்

by Staff / 02-01-2023 12:43:45pm
சிறைச்சாலை மீது துப்பாக்கிசூடு: 24 கைதிகள் தப்பியோட்டம்

மெக்சிகோவில் உள்ள சிறை மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 10 காவலர்கள் மற்றும் நான்கு கைதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கூறிய அதிகாரிகள், கைதிகளை அவர்களது குடும்பத்தினர் சந்திக்கும் போது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காலை 7 மணியளவில் சிறைச்சாலையில் இருந்து திடீரென வாகனங்களில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தாக்குதலின் போது 24 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via