பொங்கல் சிறப்பு பேருந்து - அமைச்சர் ஆலோசனை

by Staff / 02-01-2023 01:19:10pm
பொங்கல் சிறப்பு பேருந்து - அமைச்சர் ஆலோசனை

பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பொங்கல் பேருந்துகள் இயக்க தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, எத்தனை பேருந்துகள் கூடுதலாக இயக்க வேண்டும். எந்தெந்த வழத்தடங்கள் என்பது உள்ளிட்டவை குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

 

Tags :

Share via