கலைத்திருவிழா காகிதக்கூழ் சிற்பம் போட்டியில் மாநில அளவிலான முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவன். 

by Editor / 02-01-2023 09:16:07pm
 கலைத்திருவிழா காகிதக்கூழ் சிற்பம் போட்டியில் மாநில அளவிலான முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவன். 

தமிழகத்தில்அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த மாதம் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் 50க்கும் அதிகமான போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடைபெற்று அதில் வெற்றி பெரும் ஒரு மாணவர் மட்டும் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டனர்.வட்டார அளவில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து முதல் இடம் பெற்ற மாணவர்கள்  கலந்து கொண்டனர். அவர்களில் முதல் இரண்டு இடங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர்.

மாவட்ட அளவிலான போட்டியில் குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற இரு மாணவர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள்  மட்டும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.கடந்த வாரம் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது.தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு பல படிநிலைகளிலும் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டம்  பூலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் தங்கசேவாக் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார்.இம்மாணவர் காகித கூழில் சிற்பம் உருவாக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.தற்போது வெளியான போட்டி முடிவுகளின் படி மாணவர் தங்கசேவாக் மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவரை தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.இந்த வெற்றியின் மூலம் இவர் தென்காசி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் 

 

Tags :

Share via