தைஅமாவாசைசிறப்புபதிவு..!தை அமாவாசையும்..அன்னை அபிராமி அருளும்...!

by Editor / 21-01-2023 09:49:14am
தைஅமாவாசைசிறப்புபதிவு..!தை அமாவாசையும்..அன்னை அபிராமி அருளும்...!

ஜனவரி மாதம் 21 ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு அமாவாசை திதி துவங்கி, ஜனவரி 22 ம் தேதி அதிகாலை 3.20 மணி வரை பூமியில் ஆதிக்கம் செலுத்த உள்ளது. 

     அமாவாசை திதியானது  சனிக்கிழமை காலையிலேயே துவங்கி விடுவதால் சனிக்கிழமை காலையில் புனித நீராடி பிதுர் காரியங்களை செய்ய வேண்டும்.
 
        இவ்வாண்டு பிற திதிகளில் இறந்த முன்னோர்களின் விடுபட்ட திதியை இந்த தை அமாவாசை அன்று  செய்து அக்காரியத்தை சமன் செய்யலாம். 

      நம் முன்னோர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் பல அசுப பலன்களை தருவதைப் போல

      முன்னோர்கள்  இறந்த திதி அன்று 
ஆண்டு தோறும் உங்களின் முன்னோர்களை பிடித்து இருந்தாலும்  பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கு உரிய  முன்னோர் சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.
 
      ஆண்டு தோறும்  அவர்களுக்கு உரிய உணவை நாம் அளிக்காமல்  இறந்த முன்னோர்கள்  ஏமாற்றம் அடைந்தால் 

திருமணத்தடை,

தொழில் தடை அல்லது வேலையின்மை,

குழந்தை பாக்கிய தடை,

நீங்கா வறுமை,

அகால மரணம்,

தீரா நோய்,

எண்ணிய காரியம் நிறைவேறாமை,

  போன்ற அசுப பலன்கள் தருகிறது.
   
    இறந்த திதி அன்று  சிரார்த்தம் கொடுக்க இயலாதவர்கள் ஆடி,புரட்டாசி,தை மாதங்களில் வரும் அம்மாவாசையில் ஏதேனும் ஓரு அம்மாவாசையில்  சிரார்த்தம் செய்யலாம்.

       தாய்,தந்தையை குறிக்கும் கிரகங்கள் சூரியன்,சந்திரன் ஆகும்.அந்த இரண்டு கிரகங்கள் இணைந்த நாளே அம்மாவாசை ஆகும்.

     ராகு  பாட்டனாரையும், 
கேது பாட்டியையும் குறிக்கும் கிரகம்.

பிறந்த ஜாதகத்தில்

பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றும் நமது முன்னோர்களை  குறிக்கும் 
5 அல்லது 9ம் இடங்களில் பாவ கிரங்கள் இருப்பது,

5 (அ) 9 ம் இடத்து அதிபதிகளுடன் பாவ கிரகங்கள் இணைந்து இருப்பது,

5 (அ) 9ம் அதிபதி நீசம் அடைவது,

5 (அ)9ம் அதிபதி அஸ்தமணம் அடைவது,

5 (அ) 9 ம் அதிபதி லக்கனத்துக்கு 6,8,12ல் மறைவது,

சூரியன்,சந்திரன் உடன் ராகு அல்லது கேது இணைவது,

      போன்ற காரணங்களினால் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு அசுப பலன்களை தருகிறது.

     அகல மரணம் அடைந்தவருக்கு தில ஹோமம் ராமேஸ்வரத்தில் செய்து அவர்களை சாந்தி செய்து நற்பலனை பெறலாம். 

        நதிக் கரைகளிலும், கடற்கரையிலும் மூத்தோர் காரியங்களை செய்து முழுக்கு செய்வது  சிறப்பு.

               இயலாதவர்கள் அவர்களின் இல்லத்திலும் செய்யலாம்.

      திருவள்ளுவர் மூத்தோர் கடன் பற்றி  அன்றே திருக்குறளில் தெளிவாக  தெரிவித்துள்ளார்.
   
      காஞ்சி பெரியவர்  வாழ்வில் முன்னேற மூத்தோர் கடனும்,குலதெய்வ வழிபாடும் இரண்டு கண்கள்  போன்றது என்று தெரிவித்து உள்ளார்.

       மாதம் தோறும் அம்மாவாசை தினத்தன்று முன்னோர்களை நினைத்து வீட்டில்  கோலமிடாமல் வழிபட வேண்டும்.

    சாமிப் படத்துடன் இறந்த முன்னோர் படங்களை வைத்து வழிபட கூடாது.
    
   திருக்கடையூரில் அபிராமி பட்டருக்காக அம்மாவாசையை பெளர்ணமி ஆக மாற்றி நிகழ்வும் தை அம்மாவாசை அன்று நிகழ்ந்தது.

       பிதுர் காரியத்தை செய்யாமல் விட்ட அனைவரும் எதிர் வரும் தை அம்மாவாசை தினத்தில் பிதுர் சிரார்த்தத்தை செய்து வாழ்வில் முன்னேற்றம் அடையுங்கள்.

அம்மாவாசையை பெளர்ணமியாக ஒளிரச் செய்த திருக்கடையூர் அபிராமி அம்மன்:

சக்திமிகு அபிராமி அந்தாதி கவசம் தோன்றிய நிகழ்வும்:

மகானின் ஜாதகம் எப்படி இருக்கும்:

        சுபத்துவம் பெற்ற கேது,சனி,குரு கிரகங்களின் தொடர்பு பெற்று

         அவை  லக்னம் (அ) ராசிக்கு
தொடர்பு பெற்றும்

   பூர்வ புண்ணியமும் வலுவாக இருக்கும் 
நபர் முழுமையான இறைஅருள் பெற்ற மகானாக விளங்குவார்.

         திருவையாறு தியாகராஜர் வாழ்ந்த (முன்னூறு ஆண்டுகளுக்கு முன்) காலத்தில் 
                  திருக்கடையூரில் சுப்பிரமணிய பட்டர் என்பவர் அபிராமி அம்மனை எப்போதும் நினைத்து தியானத்தில் இருந்து பல்வேறு பாடல்களை பாடி வெளிப்பார்வைக்கு ஒரு பித்தனைப் போல் வாழ்ந்து வந்தார்.
     
       அவரின் பக்தியும், அவர் பாடிய பாடல்களை உலகறிய திருவுள்ளம் கொண்ட அம்பிகை

          தை அம்மாவாசை தினத்தன்று அப்போது தஞ்சாவூரை ஆட்சி புரிந்த சரபோஜி மன்னன் திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக் கோவிலுக்கு வருகை புரிந்த போது 

          தன்னை கவனிக்காமல்  தியானத்தில் இருக்கும் இவர் யார் என்று கேட்க அவ்வூரைச் சேர்ந்த பட்டரை பிடிக்காத நபர்கள் அவரை ஒரு மனநோயாளி என்றும்  கோவில் பூஜைக்கு இடையூறு செய்கிறார் என்று மன்னனிடம் தெரிவிக்க

அதை சோதிக்க விரும்பிய மன்னன் இன்று என்ன திதி என்று பட்டரிடம் கேட்க  தன்னை மறந்த நிலையில் அம்பிகை முகத்தை பெளர்ணமி நிலவாக எண்ணி தியானத்தில் இருந்த பட்டர் மன்னனிடம் பெளர்ணமி என்று சொல்ல

      கோபம் கொண்ட  மன்னன் 
இன்று முழு நிலவு வராவிட்டால்  உனக்கு மரணதண்டனை என்று அறிவித்து  சென்றார்.

        தியானம் கலைந்த பட்டர் மன்னன் வந்ததையும் தான் அமாவாசை திதியை பெளர்ணமி என்று தவறாக சென்னதை எண்ணி பதற்றம் அடைந்து 

        மன்னன் மரணதண்டனை அளிக்கும் முன் தானே தீக்குளியில் உயிரை மாய்க்க எண்ணி

       100 கயிற்றால் உறி அமைத்து அதன் கீழே நெருப்பிட்டு உறி மீது அமர்ந்து அபிராமி அம்மனை போற்றி பாடல்களை பாடுகிறார்.
     
      ஓரு பாடல் முடிந்ததும் ஒரு கயிறு வெட்டப்பட்டு  100பாடல் முடிந்தால்  அனைத்து கயிறும் வெட்டப்பட்டு கீழ் இருக்கும் தீக்குளியில் உயிரை மாய்க்க திட்டமிட்ட பட்டர்

 79வது பாடலின் போது

       பட்டருக்கு அம்மனின் தரிசனம் கிடைத்து.

      100 பாடல்களையும் பாடி முடிக்க அம்மன் உத்திரவிட்டு

      தனது காது தோட்டை விண்ணில் வீச அது ஆயிரம் நிலவாக விண்ணில் பிரகாசித்தது.

      பூம்புகாரில் இருந்த மன்னன் இரவு விண்ணில் ஏற்பட்ட பிரகாசத்தை கண்டு வியந்து பட்டருக்கு பல்வேறு சன்மானம் வழங்கினார்.

  அது முதல்   சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்ட பட்டர் அபிராமி பட்டர் என்று அழைக்கப்பட்டார்.

    அப்போது பாடப்பட்ட 100 பாடல்களும் அபிராமி அந்தாதி என்று அழைக்கப்படுகிறது.

   அந்தாதி என்றால் 

அந்தம்+ஆதி ....."முடிவு+தொடக்கம் "

           ஒவ்வொரு பாடலின் முடிவில் உள்ள வரி அடுத்த பாடலின் தொடக்கமாக வரும்.

     அபிராமி அந்தாதியில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு  இன்னல்களை தீர்க்க வல்லது.

     கல்வி,செல்வம்,நோய் தீர என்று மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அருளக் கூடிய அபிராமி அந்தாதி பாடலை தினமும் பாராயணம் செய்யுங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்.
தை அமாவாசை சனிக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சனி அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புதிய ஆடைகள் ஆகியவற்றை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.


சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களை அவமதித்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதன் மூலமும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலமும் சனி பகவானின் ஆசியை பெறலாம்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும். நம்முடைய பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம்.

தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.இந்த ஆண்டு தை அமாவாசை 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

 
அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

பொதுவாக அமாவாசை தினத்தில் நம்முடைய வீடுகளை சுத்தம் செய்து முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். அன்றைய தினம் வாசலில் கோலம் போடக்கூடாது. சண்டை சச்சரவு எதுவும் செய்யக்கூடாது. ஏழைகளையும் தூய்மை பணி செய்பவர்களை அவமானப்படுத்தக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்க கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.


 

 

Tags :

Share via