108 ரன்களுக்கு ஆல் அவுட்

by Staff / 21-01-2023 04:21:23pm
108 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணி வீரர் கிளன் பிலிப்ஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகள், ஹர்த்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 50 ஓவர்களில் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

 

Tags :

Share via