திங்கள்,வியாழன் ஆகிய இரு தினங்களில் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

by Editor / 24-01-2023 04:45:57pm
திங்கள்,வியாழன் ஆகிய இரு தினங்களில் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

 

மீனவர்கள் கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் மட்டும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

Tags :

Share via