அள்ளிவீசி அலறவிட்ட டிப் -டாப் வாலிபர்

பெங்களூரில் உள்ள சீட்டி மார்கெட் பரப்பரப்பாக இயங்கும் போக்குவரத்து நெருக்கடியான பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தின் மேலே அடையாளம் தெரியாத கோட் சூட் போட்ட டிப் -டாப் வாலிபர் ஒருவர் தான் கொண்டுவந்த துணி பையில் இருந்து 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கொண்ட பணக்கட்டினை எடுத்து மேம்பாலத்தின் மேலே இருந்தபடி பணத்தை மழைப்போல் பொழிய வைத்துள்ளார், யாரும் எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தில் இருந்து பணமழை பொழிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பண்த்தினை எடுக்க முண்டியடித்துசென்றனர்.அங்கங்கே ,இருசக்கர ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை பொறுக்கும் பணியில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு உருவானது.மேலும் அவர் கழுத்தில் ஜகடிகாரம் ஒன்றையும் கட்டியிருந்தார்.
காலை 11:15 மணியளவில் நடந்த சம்பவம் காரணமாக பணத்தை சாரல் மழையைப்போல தூவிவிட்டு சென்ற அந்த நபரை போலீசார் தேடி வாராங்க..
Tags :