,பாஜக அதிமுக கூட்டணியில் அதிமுக பலமான கட்சியாக உள்ளது--அண்ணாமலை

by Editor / 24-01-2023 09:36:40pm
,பாஜக அதிமுக கூட்டணியில் அதிமுக பலமான கட்சியாக உள்ளது--அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் செய்தியாளர்களை  சந்தித்தார்:
 சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது,திமுகவிற்கு தோல்வி பயம் வந்துள்ளது ,
நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் ,டிசம்பர் மாதத்திற்கு முன் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த படும்,பாரத பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.களத்தில் முதல் ஆளாக நிற்பவர் ஜெயிக்க வேண்டும் என்பது அவசியமில்லை,ஈரோடு இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னே அமைச்சர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அமாவாசை அன்று நல்ல நாள் பார்த்து திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.அமைச்சர்கள் படை பரிவாரத்தோடு சென்று வாக்கு சேகரிக்கின்றனர் இது விசித்திரமான தேர்தலாக உள்ளது.ஈரோடு தேர்தலைப் பொறுத்தவரை திமுக பயத்தோடு அணுகுகிறது,பாஜக அதிமுக கூட்டணியில் அதிமுக பலமான கட்சியாக உள்ளது.பல வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரிக்கவேண்டாம்.கூட்டணியினர் ஒன்றிணைந்து முன்னிற்கவேண்டும், இடைத்தேர்தலில் பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் தான் வெற்றி பெறும்.இந்த தேர்தல் பாஜகவிற்கான தேர்தல் அல்ல.எங்களுக்கான தேர்தலில் எங்கள் பணி சிறப்பாக இருக்கும் என்றார்.

 

Tags :

Share via