கலிபோர்னியாவில் அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கிச்சூடு

by Writer / 24-01-2023 11:40:58pm
கலிபோர்னியாவில் அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கிச்சூடு

அமெரிக்கா கலிபோர்னியாவில் கடந்த ஒரு சில நாட்களாக துப்பாக்கிச்சூடு சர்வசாதரணமாக நடந்து வருகின்றது.சனிக்கிழமை இரவு மான்டேரி பூங்காவில் நடந்த சந்திர புத்தாண்டுக் கொண்டாடத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர் .இத்தாக்குதலில்,6 பேர் காயமடைந்தனர். இத்துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவனாக கருதப்படும்  கூகேன்ட்ரான் 72  வயதான நபர்  முன்னாள்  தன்னார்வ  நடன  ஆசிரியர் .பாதிக்கப்பட்டவர்கள் 50,60வயதை கடந்த ஆசிய மற்றும் ஆசியஅமெரிக்கர்கள்.இரவு இசை நிகழ்ச்சியில் ஸ்டார் பால்ரூம் டான்ஸ் அரங்கத்தில்  இருந்தனர்.அப்பொழுது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது .துப்பாக்கிச்சூட்டிற்கு  காரணமானவனாக கருதப்படும் நபர் சந்தேகப்படும்படியாக ஒரு வேனில்இறந்து கிடந்ததாக தகவல்.திங்கள் கிழமை மதியம் 2.20 மணியளவில் ஹாப் மூன் பே நகரில் துப்பாக்கிசு்சூடு  நடந்ததாகவும் காயங்களுடன் நான்கு பேரும் உயிருக்கு  ஆபத்தான ஒருவரையும் மீட்டனர். ஒருவாரத்திற்கு முன்புகலிபோர்னியா துலாரேயில்  ஆறு பேர் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்  இதில் பதினாறுவயது சிறுவனும் பத்து மாத குழந்தையும் அடங்குவர்.
 

கலிபோர்னியாவில் அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கிச்சூடு

 

Tags :

Share via