ஊழியர்களை பணி நீக்கம் செய்வதில் முனையும் நிறுவன பட்டியலில் ஸ்பாட்டிபை

by Writer / 25-01-2023 12:09:22am
ஊழியர்களை பணி நீக்கம் செய்வதில் முனையும் நிறுவன பட்டியலில் ஸ்பாட்டிபை

பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை முன் வைத்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.மைக்ரோசாப்ட் 10,000 பேரை அதாவது பணியாளர் விழுக்காட்டில் 5% த்தையும் முகநூலின்மீட்டா 11,000 பேரையும்13% ,அமேசான் 18,000 பேரை ,கூகுள் நிறுவனம் 12,000 மேற்பட்ட ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் அதன் பங்குதாரர் இன்னும் அதிகம் பேரை நீக்க சொல்லியுள்ளதாக தகவல்.இந்நிலையில்தான்,ஸ்போட்டிஸ்பை நிறுவனதலைமை நிறுவாக அதிகாரி டேனியல் எக் திங்கள் அன்று  6% ஊழியர்களை நீக்க  முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.அவர் தன்  பணியாளர்களைக் குறைப்பதற்கான காரணத்தைசொல்லும் பொழுது,அதிக செயல் திறனை பெறவும் செலவுகளைக்கட்டுப்படுத்தவும் முடிவு எடுப்பதை விரைவு படுத்தவுமான முயற்சிக்காக எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via