இன்று மாலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை

by Editor / 25-01-2023 08:13:10am
இன்று மாலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு  உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, டெல்லி கடமைப் பாதையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றவுள்ளார். இதற்கு முன்பாக, நாட்டு மக்களுக்கு இன்று மாலையில் திரௌபதி முர்மு உரையாற்றவுள்ளார். அவரது உரை, அகில இந்திய வானொலி மற்றும்
அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் ஒளிபரப்பாகும்.

 

Tags :

Share via