குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. 

by Editor / 25-01-2023 09:23:04am
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி. 

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் உள் பகுதியில்  நேற்று மாலை முதல் கன மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் அருவிகளின் நகரமான போற்றப்படும் குற்றாலம் மெயின்அருவி,ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி,உள்ளிட்ட அனைத்து அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியிழும்,பழையகுற்றாலம் அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது மேலும் இன்று காலை வரை மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் பரவலாக 25 நாட்களுக்கு பிறகு மழை பெய்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விவசாயிகளின் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தீடீர் மழையின் காரணமாக ஏராளமான பகுதிகளில் பிசான நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல் அறுவடை செய்ய முடியாமல் நெற்பயிர்கள் சேதம் அடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் வனப்பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றாலம் மெயினருவி,பழையகுற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via