மின்சாரத் துறையில் 9 மாதமாக  பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை  அமைச்சர் செந்தில் பாலாஜி 

by Editor / 02-07-2021 07:16:26pm
மின்சாரத் துறையில் 9 மாதமாக  பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை  அமைச்சர் செந்தில் பாலாஜி 

 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மதுரை மண்டல அளவில் (மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்) உள்ளிட்ட 5 மாவட்டங்களின் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டமானது தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய அமைச்சர் 
தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் இலக்கு மின் அளவீடு கருவியை ஸ்மார்ட் கருவியாக இருக்க வேண்டும். உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்திற்கும், விநியோகத்திற்கு கூறிய மின்சாரத்திற்கும் இடைவெளியை வித்தியாசமாக இருப்பதால் பல்லாயிரம் கோடி இழப்பீடு மின்வாரியத்திற்கு ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஸ்மார்ட் கருவியை கொண்டுவருவதே மின்சாரத் துறையின் இலக்கு ஆகும்.
தொழில்துறை மற்றும் வீடுகளுக்கு மின் அளவீட்டு கருவி உள்ளது ஆனால் விவசாயத்திற்கு மின் அளவீடு கருவி இல்லை. இதைப் பற்றி ஆளுநர் உரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஏற்பட்ட தவறுகள் நிர்வாக கோளாறுகளால் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மின்சாரத் துறையில் 1.59 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. 
கடன் சுமையில் வட்டி விகிதம் 9.6 அதிகபட்ச வட்டி விகிதம் 13,  ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிர்பந்தித்து தமிழக அரசு இருக்கிறது. இந்த வட்டி விகிதத்தை குறைப்பதற்காக மின்சாரத்துறையில் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தாண்டில் 2000 கோடி வட்டியை செலுத்தக் கூடிய அளவு குறைக்கப்பட்டு மின்சாரத் துறை சேமிக்கப்படுகிறது.
சிஏஜி அறிக்கையில் 2ஜி பற்றி பேசியது அதிமுக, அதில் நடவடிக்கை எடுத்து - புகார்கள் வரும்பொழுது அதை விளம்பரம் படுத்திய அதிமுக அதே சிஏஜி அறிக்கை நஷ்டம் என்று குறிப்பிட்டு தமிழக அரசுக்கு இழப்பீடு என்று கூறியுள்ளது. விலங்குகளால் மின்தடை ஏற்படுகிறது என்று கூறினோம். 
மின்சாரத் துறையில் 9 மாதமாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை அதுகுறித்து விளக்கும் பொழுது குறிப்பிட்ட ஒரு பகுதியை எடிட் செய்து விளம்பரப்படுத்தியது அதிமுக. 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் செயல்படாமல் இருப்பதை பற்றி கேட்டதற்கு இதுவரை எந்த ஒரு விளக்கமும் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கவில்லை. அவர்கள் செய்யாததை பத்து நாட்களில் நாங்கள் செய்கிறோம் என்று கூறியுள்ளோம்.
சிஏஜி அறிக்கை பொருத்தவரை கடந்த ஆட்சியாளர்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பீடு தான், அவர்கள் தான் பொறுப்பு.  2006 முதல் 2011 ம் ஆண்டு வரை தமிழ்நாட்டிற்கு மின் தேவைகள் அதிகம் தேவைப்பட்டது. மின் தேவைகள் தேவைப்பட்ட காலத்தில் தனியாரிடம் வாங்கிய மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 3 ரூபாய் 50 காசுகள், ஐந்து ரூபாய் ஒரு பைசா ஆனால் கடந்த 2011 முதல் 2021 ஆண்டில் தனியாரில் வாங்கிய மின்சார கடன் இருக்கு ஐந்து ரூபாய் பத்து பைசா இதைத்தான் சிஏஜி ரிப்போர்ட் குறிப்பிட்டுள்ளது. 
அப்பகுதி மக்களிடம் பேச வேண்டும், மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்த கூடாது தான் தமிழக அமைச்சரின் உத்தரவு. நீதிமன்றத்தில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது அதன்பிறகு அப்பகுதி மக்களிடம் பேசியபின் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கடந்த ஆட்சியில் மிஷன் 20-21 அதற்கு மின்சாரத்துறையில் நாலரை லட்சம் கோடி இலக்காக வைத்து மின்சாரத்துறையில் மேம்படுத்துவோம் என தெரிவித்தார்.

 

Tags :

Share via