மாட்டுசந்தைகளில் ப்ளூ கிராஸ் அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி வசூல் செய்வதாக வியபாரிகள் புகார்.

by Editor / 30-01-2023 09:15:39am
மாட்டுசந்தைகளில் ப்ளூ கிராஸ் அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி வசூல் செய்வதாக வியபாரிகள் புகார்.

தென்மாவட்டங்களில் வாடிப்பட்டி,மணப்பாறை,மேலூர்,புதுக்கோட்டை,தஞ்சாவூர்,நெல்லை மேலப்பாளையம்,கடையம், நயினாகரம்,பாவூர்சத்திரம்,உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுச் சந்தைகள் செயல்பட்டுவருகின்றன.இந்த மாட்டு சந்தைகள்  மூலமாக விவசாயிகள் கொண்டுவரும் மாடுகளை வியபாரிகள் வாங்கி கேரளாவுக்கு இறைச்சிக்காகவும்,வளர்க்கவும் விவசாயப்பணிகளுக்கும் வாங்கிச்சென்றவண்ணம் உள்ளனர்.இந்தநிலையில் பல மாட்டு சந்தைகளில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு ப்ளூ கிராஸ் அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி வசூல் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.இன்று நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ஒருவாகனத்திற்கு  ரூபாய் 700 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறி மாட்டுவியபாரிகள் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் 2பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும் வியாபாரிகள் தரப்பில் முறைப்படி பணம் கொடுத்து மாடுகளை வாங்கிச்செல்வதாகவும்,மருத்துவ சான்றுக்களையும் பெற்றுச்செல்வதாகவும்,சிலர் ஒருவாகனத்திற்கு மாதம் 2ஆயிரம் ரூபாய்வரை ப்ளூ கிராஸ் அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி வசூல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் வாரம்தோறும் சந்தைநடைபெறும் பகுதிகளில் அந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி வசூல் செய்வதாகவும்  குற்றம் சாட்டுகின்றனர்.

 

Tags :

Share via