முழுக்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

by Admin / 07-07-2021 05:04:09pm
முழுக்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி?

முழுக்கோழி ரோஸ்ட்

தேவை

     கோழி – 1

      இஞ்சி, பூண்டு – 1

      பட்டை – 2

      மிளகாய் வற்றல் – 15

      கிராம்பு – 4

      வெங்காயம் – 10

 

நெய் – 1/16 படி

      உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை

        இளம் கோழி ஒன்றை சுத்தம் செய்து குடல் நீக்கி முழுதாக எடுத்துக்கொள்ளவும். மிளகாய் வற்றல் 15, இஞ்சி ஒரு சிறு துண்டு, பூண்டு 1, கிராம்பு 4, பட்டை 2, வெங்காயம் 10, இவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மசாலுடன் தேவையான உப்புத்தூள் மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும். கோழியின் மேற்புறத்தை முள்கரண்டி அல்லது ஊசியினால் நன்றாக குத்தி விடவும். பின் மசாலாவை உப்புக்கால் வெளிபக்கமும் நன்றாக தடவி விட்டு இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். கறி வெந்ததும் எடுத்து வாணலியில் 1/16 படி நெய் அல்லது டால்டாவை ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

 

Tags :

Share via