சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள  போதை மாத்திரைகள் பறிமுதல்

by Editor / 24-07-2021 06:18:39pm
சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள  போதை மாத்திரைகள் பறிமுதல்

 


சென்னையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலின் பேரில், காவல் ஆணையர் உத்தரவின் பேரில், இதற்கென சென்னையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அடையாறு துணை ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இதேபோன்று அமைக்கப்பட்ட தனிப்படை ஒன்று வேளச்சேரி பேபி நகரில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது போதையில் தள்ளாடியபடி வந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர்.


இதையடுத்து அவரை வைத்து சம்பந்தப்பட்ட நபரான அஜ்மல்கானை போலீஸார் பிடித்தனர். பின்னர் அஜ்மல்கானிடம் விசாரணை நடத்தியபோது ராயபுரத்தைச் சேர்ந்த பஷீர் அகமது (48) என்பவர் வெளிநாட்டிலிருந்து மெத்த பேட்டமைன் போதைப்பொருளை வரவழைத்து என் போன்ற ஆட்களுக்கு சப்ளை செய்வார் என்று தெரிவித்தார்.


பின்னர் அவரை போலீஸார் தேடிக் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான சேப்பாக்கத்தைச் சேர்ந்த சேட்டு முகமது (47), பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காலிக் (47) ஆகியோரைக் கைது செய்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான படிக வடிவிலான 1 கிலோ 348 கிராம் எடையுள்ள மெதா பேட்டமைன் போதைப்பொருளைக் கைப்பற்றினர்.


மேலும், அவர்களிடமிருந்து 1,22,000 ரூபாய் ரொக்கப் பணம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்களைக் கைப்பற்றினர். 

 

Tags :

Share via