மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

by Editor / 30-04-2023 09:49:30am
 மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தென்காசி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 132 வது பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ் கவிஞர் நாள் விழாவில் மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  துரை. இரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மாங்குடியில் தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சங்ககாலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவுத் தூணிற்கு மாவட்ட ஆட்சியர்  துரை.இரவிச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்ததாவது :மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் பாண்டியர் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.
குறுந்தொகையில் மூன்று பாடல்கள் நற்றிணையில் இரண்டு பாடல்கள் அகநானூற்றிலே ஒரு பாட்டு, புறுநானூற்றிலே ஆறு பாடல்கள் திருவள்ளுவமாலையில் ஒன்று மாங்குடி மருதன் பெயரால் இடம்பெற்றுள்ளன.

மதுரை நகரில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கிறது. அதாவது பொருள்களைக்  குவிக்க மக்கள் வாங்கி போய்க் கொண்டிருப்பார்களாம். கடல்நீரை மேகம் கொள்ளுவதால் கடல் ஒரு போதும் அளவில் குறைவதில்லை. ஆறுகள் சேர்வதால் கடல் மிகுதியாவதும் இல்லை. அதே போல் தான் மதுரையின் கடை வீதிகளும் மக்கள் கூட்டமாக வந்து பொருள்களை வாங்குவதால் குறைந்து போனதாகவோ பலர் விற்கக் கொண்டு வரும் பொருட்களால் அதிகமாகிப் போனதாகவோ இன்றி எப்போதும் போல் விரிந்து விளங்கியது மதுரைக் காஞ்சி.புடம்போட்டு எடுத்த பொன்னால் நகைகள் செய்பவர்களும் புடவைகளை விலை கூறி விற்கும் வியாபாரிகள் செம்பை நிறுத்த விலைக்கு வாங்கும் வணிகர்கள் மலர்கள் அகில், சந்தனம் ஆகியவற்றை விற்பனை செய்வோரும் எதனையும் உயிரோட்டமாக வரையும் ஓவியர்களும் இருந்தனர்  இப்படித் தமிழ் மக்களின் வாழ்வைக் கொண்டாடிய ஒரு கவிஞரின் நினைவுத்தூண் ஆகும் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் திரு. வ. சுந்தர்
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருநெல்வேலி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
முனைவர் வே. சங்கர்ராம்
ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சங்கரன்கோவில் (மாங்குடி மருதனாரின் இயற்கை நேயம்)
திரு. கோ. பூமாரி
ஆசிரியர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் (மதுரை காஞ்சி காட்டும் வாழ்வியல்)
திரு. பெ. ரவீந்திரன்
வழக்கறிஞர், உறுப்பினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திரு. பு. மா. பெரியநாயகம்

மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

கவிஞர் மூ. ஈஸ்வரமூர்த்தி
நகரச் செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
ஆகியோர் சொற்பொழிவு ஆற்றினர் 
திருமதி. பி. ரெசினாள்மேரி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருநெல்வேலி
நன்றியுரையாற்றினார். 

 

Tags :

Share via