இன்று ஆபரணத் தங்கம் கிராம் 20 ரூபாய் குறைந்துள்ளது..ஒரு பவுன்160 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 26-05-2023 11:25:01am
இன்று ஆபரணத் தங்கம் கிராம் 20 ரூபாய் குறைந்துள்ளது..ஒரு பவுன்160  ரூபாய் குறைந்துள்ளது.

நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது .நேற்று 40 ரூபாய் கிராமிற்கு குறைந்து பவுன் 320 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராம் 20 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று 5,625 ரூபாய் விற்கப்பட்டது. இன்று 5,605 ரூபாயாக விற்பனையாகிறது .ஒரு பவுன் நேற்று 45 ஆயிரம் ரூபாயாக இருந்தது .இன்று 44 ஆயிரத்து 840 ஆக விற்பனை ஆகிறது. சுத்த தங்கம் ஆகிய 24 கேரட் நேற்று 6,0 92  ரூபாய் கிராமிற்கு விற்பனையாகி ஒரு பவுன் 48,736 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இன்று ஒரு கிராம் 6,0 72 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் 48 ஆயிரத்து 576 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 76 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையானது .இன்றைக்கு 30 காசு குறைந்து 76 ரூபாய் 20 காசு ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 76 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via