மைதானத்தில் மழை வீடியோவை பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்திய நடிகர்

by Editor / 28-05-2023 11:37:13pm
மைதானத்தில் மழை வீடியோவை பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்திய நடிகர்

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. அகமதாபாத்தில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க சினிமா பிரபலங்கள் பலரும் அகமதாபாத் ஸ்டேடியத்துக்கு சென்றுள்ளனர். அந்தவகையில், இறுதிப்போட்டியை பார்க்க நேரில் சென்றுள்ள நடிகர் சதீஷ் ஸ்டேடியத்தில் மழை பெய்வதை வீடியோ எடுத்து, மழை எப்போது நிற்கும் என தெரியவில்லையே என ரியாக்‌ஷன் கொடுத்து வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மைதானத்தில் மழை வீடியோவை பகிர்ந்து வேதனையை வெளிப்படுத்திய நடிகர்
 

Tags :

Share via