உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கும் முறைகள் 

by Editor / 24-07-2021 04:58:53pm
உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கும் முறைகள் 

 

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்கள் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் பருமனை குறைக்க வழி என்ன? என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.


நன்றாக இருந்த ஒருவர் திடீரென உடல் பருமனாகும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். குண்டாக இருக்கும் எவரும் அதிகமாக சாப்பிடுபவர்கள் அல்ல! அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே குண்டாவது இல்லை.


சிறுவயது முதலே கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதால் வரும் விளைவுகளாக நாளடைவில் உடல் பருமனாக மாறி தொந்தரவை ஏற்படுத்துகின்றன. இதற்கு நம் உணவு முறை மாற்றமும் ஒரு காரணமாகும். இதனால் ரத்தக் குழாய்கள் மட்டுமின்றி முக்கிய உறுப்புகளும் ரத்த அழுத்தத்தால் பாதிப்படைகின்றன.


உடலில் தங்கும் கொழுப்புகளைக் கரைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்! ஆனால் அதற்கும் நமக்கு நேரமில்லாமல் போகிறது. சரி அப்படி என்ன செய்து நம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை விரைவாக அகற்ற,ஆப்பிள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை கொடுக்கும்.

ஆப்பிளில் விட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது எளிதில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.


கத்தரிக்காய் கலோரிகள் இல்லாத காய்கறி. கத்தரிக்காய் எவ்வளவு சாப்பிட்டாலும் நம் உடம்பில் கலோரிகள் ஏறுவதில்லை. இதில் இருக்கும் நார்சத்து கெட்ட கொழுப்பை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் கொண்டுள்ளது, எனவே அடிக்கடி உங்கள் உணவில் கத்தரிக்காயை சேர்த்து வந்தால் கொலஸ்ட்ராலை விரைவாக கரைக்கலாம்.

 

Tags :

Share via