சொமேட்டோ ஐபிஓ பங்கு வெளியீடு

by Editor / 24-07-2021 10:05:12am
சொமேட்டோ ஐபிஓ பங்கு வெளியீடு

சொமாட்டோவின் போட்டி நிறுவனமாக ஸ்விகி சேவையும், அமேசான் உணவு டெலிவரி சேவையும் உள்ளது. ஐபிஓ மூலம் 76 ரூபாய்க்கு விற்கப்பட்ட சொமேட்டோ நிறுவன பங்குகள், தேசிய பங்குச் சந்தையில் 116 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இது 52.63 சதவீதம் விலை உயர்வு. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ 125.30 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

அதே போல மும்பை பங்குச் சந்தையில் 115 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு, வர்த்தக நேர முடிவில் 125.85 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. என்.எஸ்.இ சந்தையில் அதிகபட்சமாக 138.90 ரூபாயையும், பி.எஸ்.இ சந்தையில் 138 ரூபாயையும் தொட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் சொமேட்டோ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 98,730 கோடி ரூபாயைக் கடந்திருக்கிறது. இந்திய பங்குச் சந்தைகளில் ஒரு நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் கடப்பது என்பது ஒரு பெரிய சாதனை

 

Tags :

Share via