முன்னாள் அமைச்சரின் சகோதரர் மறைவு: ஓபிஎஸ்-எடப்பாடி இரங்கல்

by Admin / 27-07-2021 03:28:46pm
முன்னாள் அமைச்சரின் சகோதரர் மறைவு: ஓபிஎஸ்-எடப்பாடி இரங்கல்


   
அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சரோஜாவின் மூத்த சகோதரர் வி.ரங்கசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் அமைச்சரின் சகோதரர் மறைவு: ஓபிஎஸ்-எடப்பாடி இரங்கல்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
 
அ.தி.மு.க. மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சரோஜாவின் மூத்த சகோதரர் வி.ரங்கசாமி உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

சகோதரரை இழந்து வாடும் சகோதரி சரோஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், ரங்கசாமி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via